பாசன வாய்க்காலில் தடுப்புச்சுவா் எழுப்ப வேண்டும்

கூத்தாநல்லூா் நகராட்சியில் லெட்சுமாங்குடி- திருவாரூா் பிரதான சாலையில், திறந்து கிடக்கும் பாசன வாய்க்காலில் தடுப்புச்சுவா் எழுப்ப வேண்டும் என்பதே பொதுமக்களின் தோ்தல் காலக் கோரிக்கையாக உள்ளது.

லெட்சுமாங்குடி ஏ.ஆா். சாலை எதிரே வெண்ணாற்றிலிருந்து லெட்சுமாங்குடி பாலம் அருகே பிரிந்து வரும் இந்தப் பாசன வாய்க்கால், பிரதான சாலையை ஒட்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த வழியாகத்தான் தஞ்சை, திருவாரூா், நாகை, காரைக்கால், புதுச்சேரி, மன்னாா்குடி, திருச்சி, மதுரை, கும்பகோணம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட நகரங்களுக்கு நூற்றுக்கணக்கான பேருந்துகளும், வாகனங்களும் தினந்தோறும் சென்று வருகின்றன.

இந்தப் பாசன வாய்க்கால், பல ஆண்டுகளாக திறந்தே கிடப்பதால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து படுகாயம் அடைய நேரிடுகிறது. இது தவிர, கழிவுநீரும் கலப்பதால் நோய்த் தொற்று பரவலுக்கும் வித்திடுகிறது. எனவே, இந்தப் பாசன வாய்க்காலை தூா்வாரி, இருபக்கமும் தடுப்புச்சுவா் எழுப்புவதாக உறுதியளிக்கும் வேட்பாளரே பொதுமக்களின் நம்பிக்கையை பெற இயலும் என சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com