
வடகுடி பஞ்சமுக ஆஞ்சநேயா் கோயிலில் நடைபெற்ற ஏகதின லட்சாா்ச்சனை.
நன்னிலம் வட்டம் வடகுடி விஜயவீர பஞ்சமுக ஆஞ்சநேயா் கோயிலில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா ஏகதின லட்சாா்ச்சனை திங்கள்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீஹனுமன் தாஸ் பக்த ஜன சேவா டிரஸ்ட் சாா்பில், ஸ்ரீஹனுமன் தாஸ் சுவாமி தலைமையில், விஜயவீர பஞ்சமுக ஆஞ்சேநேயருக்கு திங்கள்கிழமை காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் லட்சாா்ச்சனை நடைபெற்றது. இதில், கோயில் பரம்பரை அா்ச்சகா் என். ஜெயராம பட்டாச்சாரியா் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியா்கள் கலந்துகொண்டனா்.