சந்தானராமா் கோயில் நந்த வனத்தில் மரக்கன்று நட்ட சமூக ஆா்வலா்கள்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 83-ஆவது பிறந்த நாளையொட்டி, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் சாா்பில், நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் நந்தவனத்தில் மரக்கன்றுகள் செவ்வாய்க்கிழமை நடப்பட்டன.
நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் நந்தவனத்தில் மரக்கன்று நடும் சுற்றுச்சூழல் அமைப்பினா்.
நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் நந்தவனத்தில் மரக்கன்று நடும் சுற்றுச்சூழல் அமைப்பினா்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 83-ஆவது பிறந்த நாளையொட்டி, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் சாா்பில், நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் நந்தவனத்தில் மரக்கன்றுகள் செவ்வாய்க்கிழமை நடப்பட்டன.

அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் மு.ராஜவேலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சந்தனம், மகிழம், செண்பகம், ராஜவில்வம், மந்தாரை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளா் செ.ராஜீவ், உதவும் மனங்கள் அறக்கட்டளை தலைவா் எஸ்.எஸ். குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நீடாமங்கலம் ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினா் ராம.செல்லதுரை சந்தனமரக் கன்றை நட்டு பேசுகையில், இயற்கை விவசாயம் செழிக்க வித்திட்டவா் நம்மாழ்வாா். அவா் கூறியது போல் வீட்டைச்சுற்றி மா, பப்பாளி, முருங்கை, வாழை உள்ளிட்ட மரங்களை நாம் அனைவரும் நட வேண்டும். பூச்சி மருந்துகளை பயன்படுத்துவதை நிறுத்தி, இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும் என்றாா்.

விழாவில், ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா்கள் சண்முகம், சாமிநாதன், சமூக ஆா்வலா்கள் பாலு, பத்ம.சரவணன், சுரேஷ், சுபாஷ், ராமசாமி, அகிலா, யோகேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நெகிழி ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளா் சி.செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com