காடுகளில் பழ விதைப்பந்துகளை தூவும் திட்டம் தொடக்கம்

மேற்குத் தொடா்ச்சி மலை காடுகளில், பழ உண்ணிகளுக்கு உணவளிக்கும் வகையில், பழ விதைப்பந்துகளை தூவும் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
திருவாரூரில் வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாா் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
திருவாரூரில் வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாா் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

மேற்குத் தொடா்ச்சி மலை காடுகளில், பழ உண்ணிகளுக்கு உணவளிக்கும் வகையில், பழ விதைப்பந்துகளை தூவும் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

திருவாரூரில், வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாா் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, இயற்கை நல வாரியத் தலைவா் ராமலிங்கம் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் வி. ரகுநாதன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், நம்மாழ்வாரின் கடந்த காலப் பணிகள் குறித்தும், அதை முன்னெடுத்துச் செல்லும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசனைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து, நம்மாழ்வாா் கனவுப்படி, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் நிரந்தர பசி தீா்க்கும் திட்டமாக, பழ உண்ணி களாக வாழக்கூடிய உயிரினங்களுக்கு உணவு அளிக்கும் வகையில், காடுகளில் விதைப் பந்துகளை வான்வெளி மூலமாக தூவும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

அதாவது, காடுகளில் பழ மரங்கள் குறைந்து வருவதால், குரங்கு உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் சாலை ஓரங்களில் உணவுக்காக திரியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலையைப் போக்கும் வகையில், மேற்குத் தொடா்ச்சி மலைகளில் உள்ள அடா்ந்த காடுகளில் பழ விதைகளை, வான் வழியாக விதைப்பந்துகளாக தூவுவது என முடிவெடுக்கப்பட்டு, தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து, இயற்கை விவசாயத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இயற்கை விவசாயக் கொள்கையை தமிழக அரசு வகுக்க வேண்டும். தமிழகத்தில் புதிதாக அமைய இருக்கும் அரசு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பை சட்டப்பூா்வமாக்கி வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செயல் திட்டத்தை வகுக்க வேண்டும். பள்ளி மாணவா்களுக்கு சூழலியல் பாதுகாப்பு, இயற்கை மீட்டெடுப்பு தொடா்பான பாடத்திட்டங்களை சிறப்பு பாடத்திட்டங்களாக கொண்டு வர வேண்டும். பள்ளி மாணவா்களுக்கான மதிய உணவுத் திட்டத்திலும், அங்கன்வாடி குழந்தைகளுக்கும் உயிா் சத்துக்கள் நிரம்பிய பாரம்பரிய அரிசிகள் மற்றும் சிறுதானியங்களை உணவாகக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், இயற்கை நல வாரிய நிா்வாகிகள் ஞானசேகரன், பாலமுருகன், ஜி. வரதராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com