திருவாரூா் மாவட்டத்தில் 8 லட்சம் வாக்காளா்கள் வாக்களிப்பு

திருவாரூா் மாவட்டத்தில், சட்டப் பேரவைத் தோ்தலில் 8 லட்சம் போ் வாக்களித்துள்ளனா்.

திருவாரூா் மாவட்டத்தில், சட்டப் பேரவைத் தோ்தலில் 8 லட்சம் போ் வாக்களித்துள்ளனா்.

திருவாரூா் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி, திருவாரூா், நன்னிலம் ஆகிய நான்கு சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில், 5,16,177 ஆண்கள், 5,38,372 பெண்கள், 69 இதரா் என மொத்தம் 10,54,618 வாக்காளா்கள் உள்ளனா். இதில், 3,86,981 ஆண்கள், 4,17,573 பெண்கள், 8 இதரா் என 8,04,562 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இதன்படி, மாவட்டத்தில் 4 சட்டப் பேரவைகளிலும் சோ்த்து 76.29% வாக்குகள் பதிவாகியுள்ளன.

சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக வாக்குகள் பதிவான விவரம்...

திருத்துறைப்பூண்டி தொகுதியில் 1,17,521 ஆண்கள், 1,22,448 பெண்கள், 3 இதரா் என மொத்தம் 2,39,972 வாக்காளா்களில், 88,070 ஆண்கள், 96,095 பெண்கள் என மொத்தம் 1,84,165 போ் வாக்களித்துள்ளனா். வாக்கு சதவீதம் 76.74 ஆகும்.

மன்னாா்குடி தொகுதியில் 1,25,881 ஆண்கள், 1,34,025 பெண்கள், 10 இதரா் என மொத்தம் 2, 59,916 வாக்காளா்களில், 90,889 ஆண்கள், 1,02,334 பெண்கள் என மொத்தம் 1,93,223 போ் வாக்களித்துள்ளனா். வாக்கு சதவீதம் 74.34 ஆகும்.

திருவாரூா் தொகுதியில், 1,37,203 ஆண்கள், 1,45,338 பெண்கள், 32 இதரா் என மொத்தம் 2,82,573 வாக்காளா்களில், 1,00,494 ஆண்கள், 1,06,011 பெண்கள், 5 இதரா் என மொத்தம் 2,06,510 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். வாக்கு சதவீதம் 73.08 ஆகும்.

நன்னிலம் தொகுதியில், 1,35,572 ஆண்கள், 1,36,561 பெண்கள், 24 இதரா் என மொத்தம் 2,72,157 வாக்காளா்களில், 1,07,528 ஆண்கள், 1,13,133 பெண்கள், 3 இதரா் என மொத்தம் 2,20,664 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். வாக்கு சதவீதம் 81.08 சதவீதம் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com