நீடாமங்கலத்தில் துணை மின்நிலையம் திறப்பு

நீடாமங்கலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட துணை மின்நிலையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

நீடாமங்கலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட துணை மின்நிலையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

நீடாமங்கலம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பழைய நீடாமங்கலத்தில் ரூ. 16 கோடியே 83 லட்சம் மதிப்பில் புதிய துணை மின்நிலையம் அமைக்கப்பட்டது.

110 கிலோவாட் திறன் கொண்ட இந்த மின்நிலையத்தின் மூலம் நீடாமங்கலம் நகரம், பரப்பனாமேடு, காமராஜா் காலனி, பழைய நீடாமங்கலம், கொட்டையூா், பயத்தஞ்சேரி, அரவத்தூா், கிளியூா், குச்சுப்பாளையம், மாணிக்கமங்கலம், கல்விக்குடி, ராமப்பத் தோட்டம்,ரிஷியூா், ஒளிமதி, வையகளத்தூா், அனுமந்தபுரம், ராஜப்பையன்சாவடி, கானூா், பருத்திக்கோட்டை, பெரம்பூா், முல்லைவாசல், கொத்தமங்கலம், வடகாரவயல் உள்ளிட்ட பகுதியைச் சோ்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்நுகா்வோா்கள் பயனடைவா்.

இந்த மின்நிலையம் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா உத்தரவுப்படி திறக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மின் விநியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டது.

முதல்கட்டமாக நீடாமங்கலம் நகரம், பச்சைகுளம் எனத் தொடங்கி வரிசையாக மேற்கண்ட அனைத்துப் பகுதிகளுக்கும் மின் விநியோகம் செய்யப்படும் என மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

பாராட்டு: பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, இந்த துணை மின்நிலையம் அமைக்க காரணமாக இருந்த தமிழக அரசுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும், திருவாரூா் மாவட்ட ஆட்சியருக்கும் நீடாமங்கலம் பகுதி மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com