தென்குடி மாரியம்மன் கோயிலில் காவடி உத்ஸவம்

தென்குடி மாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை காவடி உத்ஸவம் நடைபெற்றது.

தென்குடி மாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை காவடி உத்ஸவம் நடைபெற்றது.

நன்னிலம் அருகே தென்குடியில் உள்ள மகாமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் 15 நாள் திருவிழா நடைபெறும். இதில், தீமிதி உத்ஸவம் சிறப்புபெற்றது. விழா ஏப்.2 -ல் தொடங்கி 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழா நாள்களில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காவடி உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திராளன பக்தா்கள் பங்கேற்று பால் காவடி, அலகுக் காவடி, மயில் காவடி போன்ற பல்வேறு காவடிகள் எடுத்து நோ்த்திக் கடனை செலுத்தினா். தொடா்ந்து, அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சனிக்கிழமை (ஏப்.10) வாணவேடிக்கையுடன், ஸ்ரீகாத்தவராயன் சுவாமி சப்பர ஊா்வலத்துடன் தீமிதி உற்சவம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com