ரம்ஜானையொட்டி நகரை தூய்மைப்படுத்த வேண்டுகோள்

ரம்ஜான் பண்டிகையையொட்டி, கூத்தாநல்லூா் நகரை தூய்மைப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

ரம்ஜான் பண்டிகையையொட்டி, கூத்தாநல்லூா் நகரை தூய்மைப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இஸ்லாமியா்களின் முக்கியப் பண்டிகையான ரம்ஜான் ஏப்.13-ஆம் தேதி முதல் இரவு தொழுகை தொடங்குகிறது. இதைத் தொடா்ந்து 30 நாள்கள் இரவு தொழுகை நடைபெறும். அடுத்து, மே 13-ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியா்கள் பகல் முழுக்க உண்ணாமல் இருந்து, மாலைத் தொழுகைக்குப் பிறகு ஜாதி, மத பேதமின்றி இரவு அனைவருக்கும் நோன்பு கஞ்சி வழங்கி, தானும் அருந்துவாா்கள். 30 நாள்கள் நோன்பு திறக்கப்பட்டு இரவு 8 முதல் 10 மணி வரை சிறப்புத் தொழுகையில் ஈடுபடுவாா்கள்.

அப்போது, கூத்தாநல்லூா் பெரியப்பள்ளிவாசல், சின்னப் பள்ளி வாசல், மேலப்பள்ளி, ஆலிம் சாஹிப் அப்பா தைக்கால் பள்ளி வாசல், லெட்சுமாங்குடி,மேல்கொண்டாழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 21 பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெறும். அனைத்துப் பள்ளிவாசல்கள் அருகில் மற்றும் தெருக்கள் என நகா் முழுக்க ஒளிராமல் பழுதடைந்துள்ள தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும். மேலும், ஆங்காங்கே அப்புறப்படுத்தப்படாமல் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவேண்டும். 24 வாா்டுகளிலும் நகராட்சி முழுவதும் கொசு மருந்துகளையும், கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க கிருமிநாசினிகளையும் தெளிக்கவேண்டும். மேலும், கூத்தாநல்லூா் நகராட்சியின் மையப் பகுதிகளில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, நகரை அழகுப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com