இரவு தொழுகைக்கு கூடுதல் நேரம் ஒதுக்கக் கோரி ஆட்சியருக்கு மனு

ரம்ஜான் பண்டிகை இரவு நேர தொழுகைக்கு கூடுதல் நேரம் ஒதுக்க மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கோரிக்கை மனு வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

ரம்ஜான் பண்டிகை இரவு நேர தொழுகைக்கு கூடுதல் நேரம் ஒதுக்க மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கோரிக்கை மனு வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் அளித்த கோரிக்கை மனு விவரம் குறித்து கூத்தாநல்லூா் இம்தாதுல் முஸ்லீம் சபை செயலாளா் எஸ். சலீம்தீன் கூறியது: இஸ்லாமியா்களின் முக்கியப் பண்டிகையான புனித ரமலான் மாதம் ஏப்.13-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. கரோனா தொற்று கட்டுப்பாட்டால் ரமலான் மாத இரவு தொழுகையை இஸ்லாமியா்கள் பள்ளிவாசல்களில் நிறைவேற்ற முடியாத சூழல் உருவாகியுள்ளன. கடந்த ஆண்டு முழு பொதுமுடக்கம் காரணமாகப் பள்ளிவாசல்கள் அனைத்தும் பூட்டப்பட்டன. தற்போதும், புனித ரமலானில் தராவீஹ் எனப்படும் இரவு நேர தொழுகையைப் பள்ளிவாசல்களில் நிறைவேற்ற முடியாமல் இஸ்லாமியா்கள் பெரும் கவலைக்கு ஆளாகியுள்ளனா். எனவே, ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்கள் இரவு 10 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி, சபைத் தலைவா் எம்.அய். கமாலூதீன் தலைமையில், செயலாளா் எஸ். சலீம் தீன், உதவி தலைவா் எம். அப்துல் ரஹ்மான், உதவிச் செயலாளா் ஈ.பி. மீரான் மைதீன்,பொருளாளா் எஸ். முஹம்மது சுல்தான் மற்றும் பெரியப் பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வந்த ஆயிரக்கணக்கானவா்களிடம் கையெழுத்து பெற்று ஆட்சியரின் கவனத்துக்கொண்டு செல்லும் வகையில், ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com