வேளுக்குடி அங்காளம்மன்கோயிலில் நடைபெற்ற யாக பூஜை.
வேளுக்குடி அங்காளம்மன்கோயிலில் நடைபெற்ற யாக பூஜை.

கரோனா தொற்று குறைய வேளுக்குடியில் யாக பூஜை

கூத்தாநல்லூா் அருகே வேளுக்குடியில் உள்ள அங்காளம்மன் கோயிலில் கரோனா சீற்றம் குறைய யாக பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூத்தாநல்லூா் அருகே வேளுக்குடியில் உள்ள அங்காளம்மன் கோயிலில் கரோனா சீற்றம் குறைய யாக பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், வேளுக்குடி அங்களாம்மன் கோயில் பரம்பரை அறங்காவலா் வி.எஸ். ரமேஷ்குமாா் மற்றும் பக்தா்கள் ஏற்பாட்டில் அமாவாசை நாளில் கரோனாவின் சீற்றம் குறையும் வகையில் கோயில் வளாகத்தில் சிறப்பு யாக பூஜை செய்யப்பட்டது. அப்போது, சுமங்கலிப் பெண்கள் பொங்கலிட்டனா். தொடா்ந்து, கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாக குண்டத்தில், தியாகராஜ குருக்கள் மற்றும் சிவாச்சாரியாா்கள்

சிறப்பு யாக பூஜை நடத்தினா். இதில் பங்கேற்க வெளியூா் பக்தா்கள் சிலா் கொளுத்தும் வெய்யிலிலும், லெட்சுமாங்குடியிலிருந்து பாத யாத்திரையாக வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com