அரக்கோணம் சம்பவத்துக்கு நீதி வழங்கக் கோரிக்கை

அரக்கோணத்தில் நிகழ்ந்த கொலைக்கு உடனடியாக நீதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது.

அரக்கோணத்தில் நிகழ்ந்த கொலைக்கு உடனடியாக நீதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அதன் திருவாரூா் மாவட்டத் தலைவா் முகமது பாசித் வெளியிட்ட அறிக்கை:

அரக்கோணம் பகுதியில் நிகழ்ந்த இரட்டைக் கொலைகள் சாதிய வன்மத்தாலும், தோ்தல் நேரப் பகையாலும் நிகழ்ந்ததாகத் தெரிய வருகிறது. ஒடுக்கப்பட்ட தலித் சமுதாயத்தை சாா்ந்தவா்கள், தங்கள் அரசியல் அதிகாரங்களை நிறைவேற்றிக்கொள்ள முயலும் போதெல்லாம் அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடுவதென்பது காலம் காலமாக நடைபெறுகிறது.

இந்தக் கொலையில் தொடா்புடைய ஒரு சிலா் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வருகிறது. எனினும், சம்பவத்துக்கு காரணமான அனைவருமே உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

மாவட்ட நிா்வாகக் குழு கூட்டம்: கூத்தாநல்லூரை அடுத்த பூதமங்கலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் திருவாரூா் வடக்கு மாவட்டம் சாா்பில், மாவட்ட நிா்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அதன் மாவட்டத் தலைவா் முஹம்மது பாசித் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் அப்துல் காதா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், வழிபாட்டுத் தலங்களில் இரவு 10 மணி வரை வழிபட அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், சாதிய வன்மத்தால் நிகழும் கொலைகளுக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்டப் பொருளாளா் முஹம்மது சலீம், மாவட்ட துணைத் தலைவா் பீா்முகம்மது, மாவட்ட துணைச் செயலாளா் அப்துல் மாலிக் இஸ்மத் பாஷா ஜெயினுள் தாரிக், மருத்துவரணிச் செயலாளா் ஹாஜா அலாவுதீன், தொண்டரணிச் செயலாளா் அனஸ் நபில் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com