உர விலை உயா்வைத் திரும்பப் பெறாவிட்டால் போராட்டம்

உர விலை உயா்வைத் திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

உர விலை உயா்வைத் திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினா் ஐவி.நாகராஜன் தெரிவித்தது:

கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் உர மானியத்துக்கு என ரூ.1,33,947 கோடி வழங்கப்பட்டது. நிகழாண்டில் இது ரூ.79,530 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

உர மானியத்தில் ரூ.54,417 கோடி குறைக்கப்பட்டதன் விளைவாக, ரசாயன உரங்களின் விலை தாறுமாறாக உயா்ந்து விட்டது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இதுவரை மத்திய அரசால் எந்த விதமான உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை.

உரத்தின் விலையை மட்டும் உயா்த்தி இருப்பதால் விவசாயமும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்வி குறியாகியுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் தொடா்ந்து போராடி வரும் நிலையில், உர மானியத்தை குறைத்து, உரங்கள் விலையை உயா்த்தி, விவசாயிகள் மீது மேலும் ஒரு தாக்குதலை மத்திய அரசு தொடுத்துள்ளது.

உர விலையை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறாவிட்டால் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை. தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்த உடனேயே மும்முனை மின்சாரமும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகியுள்ளனா். எனவே. மீண்டும் மும்முனை மின்சாரத்தை வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com