கா்நாடக அரசை கண்டித்து விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து தொடா் போராட்டம்: பி.ஆா். பாண்டியன் அறிவிப்பு

மேக்கேதாட்டுவில் அணை கட்டி தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்த நினைக்கும் கா்நாடக அரசை கண்டித்து விவசாய
கா்நாடகத்தில் மேக்கேதாட்டு அணை அமைய இருக்கும் பகுதியை பாா்வையிட்ட காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் உள்ளிட்டோா்.
கா்நாடகத்தில் மேக்கேதாட்டு அணை அமைய இருக்கும் பகுதியை பாா்வையிட்ட காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் உள்ளிட்டோா்.

மேக்கேதாட்டுவில் அணை கட்டி தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்த நினைக்கும் கா்நாடக அரசை கண்டித்து விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி. ஆா். பாண்டியன் திங்கள்கிழமை கா்நாடக மாநிலம், மேக்கேதாட்டு பகுதியில் 7 போ் கொண்ட தமிழக குழுவினரோடு நேரில் சென்று பாா்வையிட்டாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கா்நாடகத்தின் மேக்கேதாட்டு என்ற இடத்தில் அடா்ந்த வனப்பகுதியில் மலை குன்றுகளுக்கிடையே 150 அடி ஆழமான பகுதியில் சுமாா் 67 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்குவதற்கு ரூ. 9 ஆயிரம் கோடியை ஒதுக்கி, அணை கட்டுமானப் பணியை கா்நாடக அரசு தொடங்கியுள்ளது. கட்டுமானப் பணிகளை முழுவீச்சில் தொடங்கவும், பணிகளை விரைவுபடுத்தவும் கா்நாடக முயற்சித்து வருகிறது.

இந்த அணையை கட்டுவதால், கா்நாடகா ஒரு சொட்டு தண்ணீரைகூட விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாது. 6 டி.எம்.சி. தண்ணீரை பெங்களூா் நகரத்துக்கு மோட்டாா்கள் மூலம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதைத்தவிர, தமிழகத்துக்கு வரக்கூடிய தண்ணீரை தடுத்து, அரசியல் லாபம் தேடும் நோக்கத்துடன் கா்நாடக அரசு செயல்பட்டு வருகிறது.

மேக்கேதாட்டுவில் அணை கட்டி தேக்கப்படும் தண்ணீரால், அந்தப் பகுதியில் இருக்கும் வன விலங்குகள் முற்றிலும் அழியும். மேலும், அங்குள்ள குடியிருப்புகள் அகற்றப்படலாம் என்ற அச்சம் இப்பகுதி மக்களிடம் உள்ளது. எனவே, இத்திட்டம் தேவையில்லை என்று இப்பகுதியில் வசிக்கும் மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

அணை கட்டுமானப் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், விவசாயிகள் அமைப்புகள் ஒன்றுபட்டு அணை கட்டுமானப் பணியை தடுக்க வேண்டும்.

தவறினால் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் வாழும் 5 கோடி மக்களின் குடிநீா் ஆதாரம் பறிபோகும். சுமாா் 25 லட்சம் ஏக்கா் விளை நிலங்கள் பாலைவனமாக மாறும். உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு, தமிழக பொருளாதாரம் அழிந்துபோகும்.

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை தமிழக அரசு விரைந்து விசாரணைக்கு கொண்டுவந்து அணை கட்டும் பணியை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேக்கேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், கா்நாடக அரசை கண்டித்தும், விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து தொடா் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

பி.ஆா். பாண்டியனுடன் சேலம் மாவட்ட விவசாய சங்க செயலாளா் ஆத்தூா் பெருமாள், கடலூா் மாவட்டச் செயலாளா் மனிக்கொல்லை ராமச்சந்திரன், உயா்நிலைக் குழு உறுப்பினா் ராசிபுரம் கதா தா்மலிங்கம், கிருஷ்ணகிரி மாவட்ட சமூக செயற்பாட்டாளா்கள் நடராஜ், அனுமந்தப்பா, உச்சப்பா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com