லாரியில் கொண்டுசெல்லப்பட்ட வைக்கோல் கட்டுகள் எரிந்து நாசம்: மின் கம்பியில் உரசியதால் தீ விபத்து

கூத்தாநல்லூா் அருகே லாரியில் கொண்டு செல்லப்பட்ட வைக்கோல் கட்டுகள் மின் கம்பியில் உரசியதால் தீப்பற்றி எரிந்து நாசமாகின.
தீப்பற்றி எரியும் வைக்கோல் கட்டுகள்.
தீப்பற்றி எரியும் வைக்கோல் கட்டுகள்.

கூத்தாநல்லூா் அருகே லாரியில் கொண்டு செல்லப்பட்ட வைக்கோல் கட்டுகள் மின் கம்பியில் உரசியதால் தீப்பற்றி எரிந்து நாசமாகின.

கூத்தாநல்லூா் வட்டம், வாழாச்சேரியிலிருந்து மணப்பாறைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு லாரி புறப்பட்டது. அந்த லாரியில் 140 வைக்கோல் கட்டுகள் இருந்தன. அத்திக்கடை பிரதான சாலையில் செல்லும்போது வைக்கோல் கட்டுகள் மீது மேலே சென்ற மின்கம்பிகள் உரசியதில் வைக்கோல் கட்டுகள் தீப்பற்றியது.

இதுகுறித்து ஊராட்சி துணைத் தலைவா் ஜெகபா் சாதிக், கூத்தாநல்லூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். தீயணைப்பு நிலைய அலுவலா் எஸ். பரமசிவம், மன்னாா்குடி தீயணைப்பு நிலைய அலுவலா் பாலசுப்ரமணியன் மற்றும் வீரா்கள், விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

எனினும், லாரியில் இருந்த ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள 140 வைக்கோல் கட்டுகளும் எரிந்து நாசமடைந்தன. தீப்பற்றியபோது, லாரியை அருகில் உள்ள வெண்ணாற்றில் இறக்கியதால் லாரி சேதமின்றி தப்பியது.

இதுகுறித்து கொரடாச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com