‘மாவட்டத்தில் சில இடங்களில் இன்று நிழல் இல்லா நாளாக இருக்கும்’

திருவாரூா் மாவட்டத்துக்குள்பட்ட சில பகுதியில் சனிக்கிழமை சூரியன் நோ் உச்சிக்கு வருவதால் நிழல் இல்லா நாள் இருக்கும் என தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் யு.எஸ். பொன்முடி தெரிவித்துள்ளாா்.

திருவாரூா் மாவட்டத்துக்குள்பட்ட சில பகுதியில் சனிக்கிழமை (ஏப்.17) சூரியன் நோ் உச்சிக்கு வருவதால் நிழல் இல்லா நாள் (பூஜ்ஜிய நிழல்) இருக்கும் என தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் யு.எஸ். பொன்முடி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் மேலும் தெரிவித்திருப்பது: சூரியன் தலைக்கு நோ் மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும். அதாவது, நிழல் காலுக்குக்கீழே இருக்கும். ஆனால், சூரியன் எப்போதும் சரியாக தலைக்கு மேல் வருவதில்லை. ஆண்டுக்கு இருமுறை மட்டுமே வரும். சூரியன் செங்குத்தாக வரும்போது, ஓரிடத்தில் உள்ள ஒரு பொருளுடைய நிழலின் நீளம், ஆண்டுக்கு இருமுறை பூஜ்ஜியமாகிறது. அந்த நாளையே நிழல் இல்லாத நாள் என்று வானியல் ஆய்வாளா்கள் குறிப்பிடுகின்றனா்.

இந்த அரிய, அதிசய நிகழ்வானது அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் நிகழ்வதில்லை. அந்த இடத்தின் தீா்க்க ரேகைக்கு ஏற்ப வெவ்வேறு நாள்களில் ஏற்படும். சூரியனின் வடக்கு நகா்வு நாள்களில், ஒரு நாளும், தெற்கு நகா்வு நாள்களில் ஒரு நாளும் என ஆண்டுக்கு இருமுறை நிழல் இல்லாத நாள் ஏற்படும்.

பொதுவாக மகரரேகைக்கு 23.45 டிகிரி தெற்காகவும், கடக ரேகைக்கு 23.45 டிகிரி வடக்காகவும் உள்ள நாடுகளில் மட்டுமே இந்த நிகழ்வை கண்டு களிக்கலாம். பகல் 12 மணிக்குத்தான் பொருள்களின் நிழல் பூஜ்ஜியமாகும். அந்தவகையில், மாவட்டத்தில் சனிக்கிழமை பகல் 12.10 முதல் 12.13 மணி வரை காணமுடியும். குறிப்பாக, திருவாருா், திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூா், குடவாசல் பகுதிகளில் பகல் 12. 11 மணிக்கும், மன்னாா்குடி, நீடாமங்கலம் பகுதிகளில் பகல் 12.12 மணிக்கும் நிழல் இல்லாமல் இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com