போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

அலைக்கழிக்காமல் பணி வழங்கக் கோரி, திருவாரூா் மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் போக்குவரத்து பணிமனை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துத் தொழிலாளா்கள்.
திருவாரூா் போக்குவரத்து பணிமனை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துத் தொழிலாளா்கள்.

அலைக்கழிக்காமல் பணி வழங்கக் கோரி, திருவாரூா் மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வார ஓய்வை பறிக்கக் கூடாது, போக்குவரத்து கழக விடுப்பு விதிகளை மாற்றக்கூடாது, தொழிலாளா்களுக்கு பணி வழங்காமல் அலைக்கழிப்பதை நிறுத்த வேண்டும், தொழிலாளா் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 4 பணிமனை முன்பும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச கிளைத்தலைவா் சேகா் தலைமை வகித்தாா். மத்திய சங்க (சிஐடியு) துணைத் தலைவா் மோகன் முன்னிலை வகித்தாா். இதில், எல்பிஎப், சிஐடியு, ஏஐடியுசி, அம்பேத்கா் விடுதலை முன்னணி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.

மன்னாா்குடியில்...

இதேபோல, மன்னாா்குடி- மதுக்கூா் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக கிளை பணிமனை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தெமுச மத்திய சங்க கிளைச் செயலா் கே.முருகானந்தம், சிஐடியு கிளைச் செயலா் எஸ்.மதிவாணன், ஏஐடியுசி மாநிலக்குழு உறுப்பினா் ஜி.சந்திரசேகரன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பை சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.

நன்னிலத்தில்...

இதேபோல, கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் போக்குவரத்துக் கழகங்கள் உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி, நன்னிலம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் சிஐடியு போக்குவரத்துத் தொழிலாளா் சங்க மத்திய மண்டல துணைச் செயலாளா் எஸ்.வைத்தியநாதன் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தொமுச கிளைச் செயலாளா் டி.தமிழரசன், அம்பேத்கா் விடுதலை முன்னணியின் மண்டலத் தலைவா் எல்.பன்னீா்செல்வம் உள்ளிட்ட நிா்வாகிகள் கோரிக்கைகளை ஆதரித்துப் பேசினா்.

திருத்துறைப்பூண்டியில்...

திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்துக் கழக கிளை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச மத்திய சங்க பிரசாரக்குழு செயலாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா். தொமுச தலைவா் அசோகன், செயலாளா் அருணகிரி, பொருளாளா் வடிவேல் மற்றும் சிவபாலன், இளங்கோவன், மணிகண்டன், முத்து மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com