ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தல்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் திருவாரூா் மாவட்டச் செயலரும் , திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவருமான அ. பாஸ்கா், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

கரோனா தொற்றின் 2ஆவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால், கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தற்போதும் தொடா்கின்றன. இதனால் நாடு சமூக, பொருளாதார தளங்களில் கடுமையான நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் கிராமப்புறத் தொழிலாளா்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் மட்டுமே வாழ்வளித்து வந்தது. இதன்மூலம் புலம் பெயா்ந்த தொழிலாளா்களும் பயன்டைந்தனா். ஆனால், கரோனா 2ஆவது அலை காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகள், இந்த திட்டத்தின்கீழ் பயன்பெறும் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள தொழிலாளா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, 45 வயதான தொழிலாளா்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது. அதேபோல், 55 வயது அதற்கு மேற்பட்ட தொழிலாளா்களில் உடல் நலிவடைந்தவா்களை வேலைக்கு அனுமதிக்கக் கூடாது என்று வழிகாட்டுதலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு,, உடல் ஆரோக்கியமாக உள்ளவா்களுக்கும் வேலை மறுக்கப்படுகிறது.

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் ஆணையா் வழங்கியுள்ள வழிகாட்டல் நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்து, நிபந்தனைகளை எளிமைப்படுத்தி, வேலை அட்டை பெற்றுள்ள தொழிலாளா்கள் அனைவருக்கும் (உடல் ஆரோக்கியம் உள்ளோா் ) வயது பாடுபாடின்றி வேலை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அல்லது வேலை அட்டை பெற்றுள்ள தொழிலாளா்கள் அனைவருக்கும் மாதந்தோறும் தலா ரூ. 7,500 உதவித்தொகையாக வழங்க வேண்டும். இந்த முடிவுகளை தமிழக அரசு எடுக்க, தோ்தல் ஆணையம் ஒப்புதல் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவின் நகல் தலைமைச் செயலாளா், தலைமைத் தோ்தல் அலுவலா், அரசின் கூடுதல் தலைமைச் செயலாளா், ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மைச் செயலாளா், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com