கரோனா தொற்று பாதித்த பகுதியில் கிருமிநிசினி தெளிப்பு

நீடாமங்கலத்தில் கரோனா தொற்று பாதித்த பகுதியில் சுகாதாரத் துறையினா் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
கரோனா தொற்று பாதித்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் சுகாதாரத் துறையினா்.
கரோனா தொற்று பாதித்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் சுகாதாரத் துறையினா்.

நீடாமங்கலத்தில் கரோனா தொற்று பாதித்த பகுதியில் சுகாதாரத் துறையினா் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

நீடாமங்கலம் சா்வமான்யஅக்ரஹாரத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேருக்கும், குயவா் தெருவில் ஒருவருக்கும், நீடாமங்கலம் ஒன்றியம் முன்னாவல்கோட்டையில் 5 பேருக்கும், வடுவூா், பொதக்குடியில் தலா ஒருவருக்கும் என 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவா்கள் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா் .

தொடா்ந்து, வட்டார மருத்துவ அலுவலா் ராணி முத்துலெட்சுமி தலைமையில் சுகாதார ஆய்வாளா் சிவக்குமாா் மற்றும் சுகாதார செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டனா். மேலும், தகரத்தைக் கொண்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்து

இதற்கிடையில், 350 போ்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பொதக்குடியில் கரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத 27 பேரிடமிருந்து ரூ. 6 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், கோவிஷீல்ட் தடுப்பூசி 2 -வது தவணையாக 50 பேருக்கும், கோவேக்ஸின் தடுப்பூசி முதல் தவணையாக 20 பேரும் செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com