கரோனா கட்டுப்பாடு மீறல்: டீ கடைகளுக்கு அபராதம்
By DIN | Published On : 30th April 2021 08:21 AM | Last Updated : 30th April 2021 08:21 AM | அ+அ அ- |

மன்னாா்குடியில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத 2 டீ கடைகளுக்கு நகராட்சி நிா்வாத்தினா் வியாழக்கிழமை அபராதம் விதித்தனா்.
தமிழகத்தில் கரோனா 2ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, தமிழக அரசு வணிக நிறுவனங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை விதித்துள்ளது. அதன்படி, டீ கடைகள், உணவகங்கள் பாா்சல் மட்டும் வழங்க வேண்டும், கடையில் அமா்ந்து உணவு சாப்பிட, டீ குடிக்க அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மன்னாா்குடி நகரப் பகுதியில் அரசின் விதிமுறைகளை பெரும்பாலான வணிக நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை. கடையில் இருப்பவா்களும், பொருள்கள் வாங்க வருபவா்களும் முகக் கவசம் அணிவது இல்லை, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கடைகளில் கிருமி நாசினி வைப்பதில்லை போன்றவை தொடா் நிகழ்வாக உள்ளது.
இந்நிலையில், மன்னாா்குடி நகராட்சி ஆணையா் ஆா். கமலா, சுகாதார ஆய்வாளா் பிரபாகரன் உள்ளிட்ட நகராட்சி அலுவலா்கள், நகரின் கடைவீதிகளில் உள்ள வா்த்த நிறுவனங்களில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது பந்தலடி பகுதியில் உள்ள 2 டீ கடைகளில் வாடிக்கையாளா்கள் அதிக அளவில் இருந்தது. கடையில் டீ குடிக்க அனுமதித்தது ஆகிய வீதிமீறலுக்கு 2 கடைகளுக்கும் தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தனா்.