திருத்துறைப்பூண்டி டவுன் லயன்ஸ் சங்கம் சார்பில் தாய்ப்பால் வார விழா

திருத்துறைப்பூண்டி டவுன் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் தினம் திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது.
திருத்துறைப்பூண்டி டவுன் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக தாய்ப்பால் வார விழா.
திருத்துறைப்பூண்டி டவுன் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக தாய்ப்பால் வார விழா.

திருத்துறைப்பூண்டி டவுன் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் தினம் திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது.

லயன்ஸ் சங்க தலைவர் பி.சக்கரபாணி தலைமை வகித்தார். தலைமை மருத்துவர் டாக்டர் டி. சிவக்குமார், துணைத் தலைவர் ஆர். சின்னதுரைஆகியோர் முன்னிலை வகித்தனர். தாய்ப்பாலின் அவசியம் குறித்து மருத்துவர் ரஞ்சனி பிரியா பேசுகையில் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலே முதல் உணவாக அமையவேண்டுமென்றும், தாய்ப்பால் முதலில் சுரக்கும் சீம்பால் குழந்தையின் முதல் தடுப்பு மருந்தாகுமென்றும் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் தாய்ப்பாலில் நிறைந்துள்ளதாகவும், குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டுமென்றும், குழந்தைக்கு குறைந்தது 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டும் கொடுத்தால் போதுமானது.  

இரண்டு வருடங்கள் வரை தாய்ப்பால் ஊட்டலாம் பலவித தொற்று நோய்களிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கும் ஆற்றல் தாய்ப்பாலுக்கு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி உடல் வலிமை அதிகரிக்கக்கூடியது எந்த சிக்கலும் வராத ஒரே உணவு தாய்ப்பால் குழந்தைகளுக்கு பாலூட்ட தாய்மார்களுக்கு தேவையானவை தனிமை ,நம்பிக்கை, பயிற்சி ,முயற்சி ,தூய்மை ,குழந்தைக்கு பால் கொடுக்கும் பொழுது மார்போடு அணைத்து கைகளால் தலையை முதுகை வருடி பேசி பாலூட்டும் போது குழந்தையின் உணர்வுகளுக்கு சிறந்த உணர்வு கிடைக்குமென்றார்.

தண்ணீர் சர்க்கரை நீரோ பிறந்த குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது, குழந்தையானது எப்போதும் தாயுடனே இருக்க வேண்டும், குழந்தை அழும் பொழுது தாய்ப்பால் கொடுத்தால் போதுமானது. எக்காரணம் கொண்டும் குழந்தைக்கு புட்டிப்பால் கொடுக்க கூடாது, குழந்தையின் வாயில் ரப்பர் அல்லது பூட்டி வைக்கக் கூடாது என்று கூறினார். குழந்தைகளுக்கு துண்டு உடை தாய்மார்களுக்கு சத்து மாவு, ரஸ்க் பிஸ்கட் உள்ளிட்டவை ரூ 5,000 மதிப்பிலான பொருள்களை தலைமை மருத்துவர் டாக்டர் டி.சிவகுமார் வழங்கினார். செயலாளர் லயன் பி.சதாசிவம் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com