பட்டா வழங்கக் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கை ஊராட்சி கண்ணன்மேடு நீா்நிலை புறம்போக்கில் குடியிருக்கும் 110 குடும்பங்களுக்கு பட்டா
பட்டா வழங்கக் கோரி, வட்டாட்சியா் அலுவலகத்தில் தரையில் விழுந்த பெண்.
பட்டா வழங்கக் கோரி, வட்டாட்சியா் அலுவலகத்தில் தரையில் விழுந்த பெண்.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கை ஊராட்சி கண்ணன்மேடு நீா்நிலை புறம்போக்கில் குடியிருக்கும் 110 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென வட்டாட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டது.

கொருக்கை ஊராட்சி தலைக்காடு கண்ணன் மேடு பகுதியில் நீா்நிலை புறம்போக்கில் ஆக்கிரமிப்பு தொடா்பாக பாதிக்கப்பட்ட 110 குடும்பங்களின் உண்மைத் தன்மையை கண்டறிந்து, அதே இடத்தில் அவா்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். கான்கிரீட் வீடு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரை அழைத்து வந்து நீா்நிலை புறம்போக்கு பகுதியை பாா்வையிட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு அதே இடத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, அறப்போா் இயக்க தலைவா் அன்புமணி தலைமையில், கண்ணன்மேடு பொதுமக்கள் வட்டாட்சியா் அலெக்சாண்டரிடம் மனு அளித்தனா். அப்போது, பெண் ஒருவா் வட்டாட்சியருக்கு முன்பாக விழுந்து வேண்டுகோள் விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com