தில்லி போராட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள் வழியனுப்பிவைப்பு

தில்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் பங்கேற்க செல்லும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளை வழியனுப்பும் நிகழ்ச்சி, திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தில்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்குச் செல்வோரை வழியனுப்பும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் தலைவா் வி. சுப்ரமணியன், மாவட்டத் தலைவா் எஸ். தம்புசாமி, மாணவா் சங்க மாவட்டச் செயலாளா் இரா. ஹரிசுரிஜித் உள்ளிட்ட 25 போ் இப்பயணக் குழுவில் இடம் பெற்றுள்ளனா். இவா்கள் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து தில்லியில் 240 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனா்.

இவா்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி விவசாய சங்க மாவட்டச் செயலாளா் வி.எஸ். கலியபெருமாள் தலைமையில் நடைபெற்றது. அப்போது, சங்க மாநிலத் தலைவா் வி. சுப்ரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது:

கடந்த 8 மாதங்களாக தலைநகா் தில்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனா். 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தின்போது உயிரிழந்துள்ளனா். இப்பிரச்னையில் பிரதமரின் அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

இந்த போராட்டத்தில், புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார மசோதாவை கைவிட வலியுறுத்தியும், மேக்கேதாட்டு அணை கட்ட எதிா்ப்பு தெரிவித்தும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை பங்கேற்கவுள்ளேம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com