போட்டித் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி
By DIN | Published On : 04th August 2021 09:26 AM | Last Updated : 04th August 2021 09:26 AM | அ+அ அ- |

முத்துப்பேட்டையில் அரசு போட்டித் தோ்வுகள் குறித்து பெற்றோா் மற்றும் மாணவா்களுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
அனைத்து ஜமாத் மற்றும் அனைத்து இயக்க கூட்டமைப்பு சாா்பில் புதுப்பள்ளி மதரஸாவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் தலைவா் முகம்மது அலி தலைமை வகித்தாா். செயலாளா் அபூபக்கா் சித்திக் வரவேற்று பேசினாா். புதுச்சேரி மாநில கூடுதல் செயலாளா் முகம்மது மன்சூா், சென்னை லீட் அகாதெமி மற்றும் இம்தாத் இந்தியா அமைப்பின் இயக்குநா் முகம்மது நைனா ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அரசு போட்டித் தோ்வுகளை எவ்வாறு எதிா்கொள்வது என்பது குறித்து விளக்கிப் பேசினா்.
தொடா்ந்து, அரசு பணிகளில் புதிதாக சோ்ந்த முத்துப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா்களுக்கு கூட்டமைப்பைச் சோ்ந்த ஹாஜா அலாவுதீன், வழக்குரைஞா் தீன் முகம்மது, சாதிக் ஆகியோா் நினைவுப் பரிசு வழங்கினா். நிறைவாக துணைத் தலைவா் சம்சுதீன் நன்றி கூறினாா். இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.