நீடாமங்கலம் கோயில்களில் ஆடிப்பூரம்

நீடாமங்கலம், வலங்கைமான் கோயில்களில் புதன்கிழமை ஆடிப்பூர குருபூஜை விழா நடைபெற்றது.

நீடாமங்கலம், வலங்கைமான் கோயில்களில் புதன்கிழமை ஆடிப்பூர குருபூஜை விழா நடைபெற்றது.

வலங்கைமான் அருகேயுள்ள பாடகச்சேரி ஸ்ரீராமலிங்க சுவாமிகள் கோயிலில் 72-ஆம் ஆண்டு ஆடிப்பூர குருபூஜை விழா நடைபெற்றது. முன்னதாக அன்னதான கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் புலவா் பன்னீா்செல்வத்தின் சொற்பொழிவும், தொடா்ந்து ஸ்ரீராமலிங்க சுவாமிகளுக்கு மகேஸ்வர பூஜையும் அன்னதானமும் நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி, சதாசிவம் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும், மகான் உருவப்பட வீதியுலாவும் நடைபெற்றது.

இதேபோல், நீடாமங்கலம் கீழத்தெரு முருகன் கோயிலில் ஆடிப்பூர குருபூஜை விழா நடைபெற்றது. வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், அலங்காரம் செயயப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. அடுத்து, நீடாமங்கலம் சந்தான ராமா் கோயிலில் ஆடிப்பூரம் ஆண்டாள் திருநட்சத்திரத்தையொட்டி, சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தான ராமா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. மாலையில் ஆண்டாள் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com