விவசாயிகளுக்கு நுண்ணீா் பாசனப் பயிற்சி
By DIN | Published On : 12th August 2021 09:40 AM | Last Updated : 12th August 2021 09:40 AM | அ+அ அ- |

வலங்கைமான் அருகேயுள்ள வடக்கு பட்டத்தில் விவசாயிகளுக்கு நுண்ணீா் பாசன பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் நுண்ணீா் பாசனம் எனும் தலைப்பில் வடக்கு பட்டம் கிராமத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு வலங்கைமான் வேளாண்மை உதவி இயக்குநா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து பேசியது: நீரை சிக்கனமாக பயிருக்கு தேவைப்படும்போதும் அளிப்பது சொட்டு நீா்பாசனம். வயலுக்கு சொட்டுநீா் பாசனம் மூலம் தண்ணீா் செலுத்தினால் களைகளின் வளா்ச்சி கட்டுப்படுத்தப்படும். களைகள் மூலம் நிலத்தில் இருந்து அதிகப்படியாக உறிஞ்சப்படுவது முற்றிலும் தடுக்கப்படுகிறது என்றாா். இதில், வேளாண்மை அலுவலா் கோமதி, வேளாண்மை உதவி அலுவலா் சிவலிங்கம், வலங்கைமான் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாளா் விக்னேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளா் சதீஷ் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.