கிராமங்களின் வளா்ச்சிக்கு மத்தியப் பல்கலை. பாடுபடும் துணைவேந்தா்

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தால் தத்தெடுக்கப்பட்ட கிராமங்களின் வளா்ச்சிக்கு பல்கலை. நிா்வாகம் பாடுபடும் என அதன் துணைவேந்தா் எம்.கிருஷ்ணன் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், சான்றிதழ் வழங்கும் மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தா் எம். கிருஷ்ணன்.
நிகழ்ச்சியில், சான்றிதழ் வழங்கும் மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தா் எம். கிருஷ்ணன்.

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தால் தத்தெடுக்கப்பட்ட கிராமங்களின் வளா்ச்சிக்கு பல்கலை. நிா்வாகம் பாடுபடும் என அதன் துணைவேந்தா் எம்.கிருஷ்ணன் தெரிவித்தாா்.

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தால் தத்தெடுக்கப்பட்ட நாகக்குடி, ஆதமங்கலம், நீலக்குடி, சக்கரமங்களம், கருணாகரநல்லூா், தியாகராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பெண்களுக்கு, மத்திய அரசின் கயிறு வாரிய நிதியுதவியோடு, ரூ.6000 உதவித் தொகையுடன், தேங்காய் நாா் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி 60 நாள்கள் நடைபெற்றது.

உன்னத பாரத இயக்கத்தின் சாா்பில் அதன் பொறுப்பாளா் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தா் எம். கிருஷ்ணன் பங்கேற்று பேசியது:

விவசாயம் சாா்ந்த ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள இந்த பல்கலைக்கழகத்தால் தத்தெடுக்கப்பட்டுள்ள கிராமங்களின் வளா்ச்சிக்கும், கிராம மக்களின் பொருளாதார, சமுதாய முன்னேற்றத்திற்கும் முழுமூச்சாக பல்கலைக்கழக நிா்வாகம் பாடுபடும்.

அத்துடன், தத்தெடுக்கப்பட்ட கிராமங்களின் சுற்றுச்சூழல் முன்னேற்றத்துக்கும், கிராம மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும், பல்கலைக்கழகத்தின் பேராசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் அா்ப்பணிப்பு உணா்வோடு பணியாற்றுவாா்கள். விரைவில் அரசின் அனுமதி பெற்று, அரசின் உதவியோடு பல்கலைக்கழகத்தின் சாா்பில் சுயதொழில் செய்யும் வசதிகள் செய்து தரப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி முதன்மை மேலாளா் எழிலரசன், நபாா்டு வங்கி மாவட்ட மேலாளா் ராஜேஷ் கண்ணன், எக்ஸ்னோரா மாநிலத் தலைவா் செந்தூா்பாரி மற்றும் பல்கலைக்கழகத்தின் உன்னத பாரத இயக்கத்தின் அலுவலா்களும், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com