முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
நீடாமங்கலத்தில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள்
By DIN | Published On : 05th December 2021 02:39 PM | Last Updated : 05th December 2021 02:39 PM | அ+அ அ- |

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி நீடாமங்கலத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினர்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் நீடாமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. நீடாமங்கலம் அண்ணாசிலை பகுதியிலிருந்து அதிமுகவினர் மவுன ஊர்வலமாக புறப்பட்டு பெரியார் சிலை பகுதியை வந்தடைந்தனர்.
அங்கு அலங்காரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு நீடாமங்கலம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவரும், மேற்கு ஒன்றிய செயலாளருமான எம்.ஆர். ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் கோ. அரிகிருஷ்ணன், நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆதி. ஜனகர், நகரசெயலாளர் இ.ஷாஜஹான், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் சா. செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நகர அவைத்தலைவர் ராமு,எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் பொன்னுசாமி,
பெரியதம்பி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வீரையன் மற்றும் கூட்டுறவு வங்கி தலைவர்கள், முன்னாள், இந்நாள் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், சார்பு அணியினர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.