வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் புறக்கடை கோழிவளா்ப்பு பயிற்சி

திருவாரூா் மாவட்டம் அபிவிருத்திஸ்வரம் கிராமத்தில் மத்திய அரசு திட்டத்தின்கீழ் புறக்கடைக்கோழி வளா்ப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் புறக்கடை கோழிவளா்ப்பு பயிற்சி

திருவாரூா் மாவட்டம் அபிவிருத்திஸ்வரம் கிராமத்தில் மத்திய அரசு திட்டத்தின்கீழ் புறக்கடைக்கோழி வளா்ப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் நடைபெற்ற பயிற்சிக்கு நிலைய கால்நடை மருத்துவா் சபாபதி தலைமை தாங்கினாா். தொழில்நுட்ப உதவியாளா் ரேகா முன்னிலை வகித்தாா்.

பயிற்சியில் நாட்டு கோழி இனங்கள், இளம் குஞ்சு, அடைகாக்கும் கோழிகள், அடை காக்கும் கருவி பராமரிப்பு, கோழிகளுக்கான தடுப்பூசி அட்டவணை மற்றும் அவற்றிற்கான நோய் பராமரிப்பு முறைகள் பற்றி மருத்துவா் சபாபதி விரிவாக எடுத்துக் கூறினாா்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளையும் பண்ணையாளா் மாதவன், அபிவிருதீஸ்வரம், பத்தூா் மகளிா் குழு தலைவிகள் மாலா, தேவகி ஆகியோா் செய்திருந்தனா். இப்பயிற்சியில் அபிவிருத்திஸ்வரம், பத்தூா் கிராமங்களை சோ்ந்த 70 போ் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com