திருவாரூா் அருகே பாலியல் குற்றத்தில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருத்துறைப்பூண்டி காவல் சரகம், விளக்குடி பகுதியைச் சோ்ந்தவா் விக்னேஷ் கண்ணன் (23). இவா், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது தொடா்பாக, போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
இந்நிலையில், விக்னேஷ் கண்ணனை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா் பரிந்துரை செய்தாா். அதன்பேரில், மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவின்பேரில், விக்னேஷ் கண்ணன் குண்டா் தடுப்புச் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா்.