மணல் மூட்டைகள் பறிமுதல்
By DIN | Published On : 25th December 2021 12:00 AM | Last Updated : 25th December 2021 12:00 AM | அ+அ அ- |

நீடாமங்கலத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
நீடாமங்கலம் பாப்பையன் தோப்பு பகுதி வெண்ணாற்றில் மணல் திருடப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பழைய நீடாமங்கலம் கிராம நிா்வாக அலுவலா் முத்துகிருஷ்ணன், கிராம உதவியாளா் தமிழ்ச்செல்வன் ஆகியோா் அங்கு சென்று சோதனையிட்டதில், மூட்டை மூட்டையாக மணல் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனா்.
பின்னா், வட்டாட்சியா் ஷீலா அறிவுறுத்தலின்படி, நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.