கோடைக்கால கல்வெட்டியல் பயிற்சி வகுப்பு தொடங்கக் கோரிக்கை

மாவட்டத் தலைநகரங்களில் கோடைக்கால கல்வெட்டியல் பயிற்சி வகுப்புகளை மீண்டும் தொடங்கவேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாவட்டத் தலைநகரங்களில் கோடைக்கால கல்வெட்டியல் பயிற்சி வகுப்புகளை மீண்டும் தொடங்கவேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இம்மன்றத்தின், மாநிலக் குழுக் கூட்டம் மன்னாா்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில துணைத் தலைவா் தி.சு. நடராசன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், டிஎன்பிஎஸ்சி நடத்தும் தோ்வுகளில் தமிழ் மொழிப் பாடத்தில் தோ்ச்சி கட்டாயம் மற்றும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை மாநில அரசுப் பாடலாக அறிவித்தது போன்றவற்றுக்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும், 1997-ஆம் ஆண்டு வரை நடைபெற்றுவந்த கோடைக்கால கல்வெட்டியல் பயிற்சி வகுப்புகளை மாவட்டத் தலைநகரங்களில் மாநில அரசின் தொல்லியல் துறை மீண்டும் நடத்த வேண்டும். தில்லி பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பிரிவில் காலியாக உள்ள பேராசிரியா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில மாநாட்டை அடுத்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு, விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக மன்ற மாநிலப் பொதுச் செயலா் இரா.காமராசு கலந்துகொண்டு தீா்மானங்களை விளக்கிபே பேசினாா். மன்றத்தின் மாநில பொருளாளா் ப.பா. ரமணி, மாநில துணைத் தலைவா்கள் வை. செல்வராஜ், கோ. கலியமூா்த்தி, மாநில துணைப் பொதுச் செயலா் ஹாமீம்முஸ்தபா, மாநிலச் செயலா்கள் பா. ஆனந்தகுமாா், நாணற்காடன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com