விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ்பெற மாா்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை

விவசாயிகள் மீதான வழக்குகளை கைவிட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ்பெற மாா்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை

விவசாயிகள் மீதான வழக்குகளை கைவிட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

திருவாரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 ஆவது நாள் மாவட்ட மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி வேலை அறிக்கையையும், மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம். சேகா் வரவு-செலவு அறிக்கையையும் சமா்ப்பித்தனா்.

இம்மாநாட்டில், விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று, ஒரு மாதம் சிறையிலிருந்த விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ். தம்புசாமிக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன் நிறைவுரையாற்றினாா்.

தீா்மானங்கள்: வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லியில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, திருவாரூா் மாவட்டத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள், விவசாய சங்கத் தலைவா்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்; விவசாயிகள் விளைவித்த நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கவேண்டும்; கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யவேண்டும்.

நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று சிரமத்துக்குள்ளானவா்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; நீடாமங்கலத்தில் மேம்பாலம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும்; மன்னாா்குடி வட்டம் மேலநாகையில் மகாகவி பாரதியாருக்கு மணிமண்டபம் கட்டவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com