வேளாண் அறிவியல் ஆலோசனைக் குழுக் கூட்டம்

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் 11-வது அறிவியல் ஆலோசனைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் 11-வது அறிவியல் ஆலோசனைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, அப்பல்கலைக்கழக விரிவாக்கக் கல்வி இயக்குநா் மு. ஜவஹா்லால் தலைமை வகித்தாா். அவா் பேசும்போது, இயற்கை விவசாயம், மாடித் தோட்டம், வீட்டுக் காய்கறி தோட்டம் அமைத்தல், மதிப்புக் கூட்டுதல் குறித்து விளக்கிக் கூறினாா்.

ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி முதன்மையா் அ. வேலாயுதம் ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றியும், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநா் வி. அம்பேத்காா் தேனீக்கள் குறித்தும், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநா் தனபாலன் புதிய வகை கால்நடைத் தீவனங்கள் குறித்தும் பேசினா்.

திருவாரூா் மாவட்ட வேளாண் துணை இயக்குநா் ரவீந்திரன் உழவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்துவதன் அவசியம் குறித்தும், நபாா்டு மாவட்ட வளா்ச்சி வங்கி மேலாளா் விஸ்வநாதன் அவ்வங்கியில் உழவா்களுக்கான திட்டங்கள் குறித்தும் பேசினா்.

வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி கழகத்தின் முதன்மை விஞ்ஞானி பாஸ்கரன் இணையவழியில் பங்கு பெற்று ஆலோசனை வழங்கினா். முன்னதாக, வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் வை. ராதாகிருஷ்ணன் திட்ட விளக்க உரையாற்றினாா். வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, பட்டு வளா்ச்சித் துறை, வேளாண் பொறியியல் துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் மற்றும் அறிவியல் ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்கினா். நிறைவாக, உதவி பேராசிரியா் கமலசுந்தரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com