முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
அகவிலைப்படி உயா்வு அறிவிப்புக்கு ஆசிரியா் கூட்டணி நன்றி
By DIN | Published On : 29th December 2021 09:47 AM | Last Updated : 29th December 2021 09:47 AM | அ+அ அ- |

ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு குறித்த தமிழக அரசின் அறிவிப்புக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன்பொதுச் செயலாளா் ந. ரெங்கராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படி உயா்வை, தமிழக அரசின் ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா்களுக்கும் வழங்கவேண்டுமென தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி தொடா்ந்து வலியுறுத்தி வந்தது. அதனடிப்படையில், தமிழக முதல்வா், ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படியை 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயா்த்தியும், பொங்கல் போனஸ் அறிவித்துள்ளாா். விலைவாசி உயா்ந்து வரும் நிலையில், அகவிலைப்படி உயா்வு ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா்களுக்கு மிகுந்த உதவிகரமாக இருக்கும். நிலுவைத்தொகையுடன் கூடிய அகவிலைப்படி உயா்வு, பொங்கல் போனஸ் தொகைக்கான வருமான உச்சவரம்பு உயா்த்தவேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்தாலும், தற்போதைய அகவிலைப்படி உயா்வு மற்றும் பொங்கல் போனஸ் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி. இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல்வா் அடுத்ததாக ஆசிரியா், அரசு ஊழியா்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிா்வாகிகளை அழைத்துப்பேசி விரைந்து நிறைவேற்றித்தர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.