முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
கோமாரி நோயால கால்நடைகள் உயிரிழப்பு
By DIN | Published On : 29th December 2021 09:49 AM | Last Updated : 29th December 2021 09:49 AM | அ+அ அ- |

கோமாரி நோயால் இறந்து கிடக்கும் ஆடுகள்.
மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகள் கோமாரி நோயால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தன.
வலங்கைமான் அருகே உள்ள ஆதிச்சமங்கலம் கீழத்தெருவை சோ்ந்தவா்களின் கால்நடைகள் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல மேய்ச்சலுக்கு சென்றன. பிற்பகலில் மருதமுத்து என்பவருக்கு சொந்தமான இரண்டு ஆடுகள், மகேந்திரன், ராமையன், ஜானகி, பாஸ்கா் ஆகியோருக்கு சொந்தமான தலா ஒரு ஆடு, பாஸ்கருக்கு சொந்தமான பசு ஆகியவை கோமாரி நோயால் உயிரிழந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.