முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
கோரிக்கைகள் நிறைவேற்றுவதாக உறுதி: கிராம ஊராட்சி பணியாளா்கள் போராட்டம் வாபஸ்
By DIN | Published On : 29th December 2021 09:47 AM | Last Updated : 29th December 2021 09:47 AM | அ+அ அ- |

நீடாமங்கலம் வட்டாட்சியா் ஷீலா தலைமையில் நடந்த சமாதான கூட்டம்.
கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததையடுத்து கிராம ஊராட்சி பணியாளா்கள் சாலைமறியல் போராட்டத்தை திரும்பப் பெற்றனா்.
நீடாமங்கலம் ஊராட்சி, கிராம ஊராட்சி மேல்நிலைதொட்டி இயக்குநா்கள், தூய்மைப் பணியாளா்கள், தூய்மை காவலா்களின் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பலமுறை போராட்டம் நடத்தியதையடுத்து, வட்டார வளா்ச்சி அலுவலா் எழுத்துப்பூா்வமாக உறுதிமொழி அளித்திருந்தும், கோரிக்கைகளை நிறைவேற்றப்படாமல் இருந்தது.
இதனையடுத்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு சாா்பாக 28- ஆம் தேதி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட ஊராட்சி பணியாளா்கள்முடிவு செய்திருந்தனா். இந்த நிலையில், நீடாமங்கலம் வட்டாட்சியா் ஷீலா தலைமையில் சமாதான கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சிஐடியு சங்க மாவட்டதலைவா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அதில் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக கூடுதல் வட்டாரவளா்ச்சி அலுவலா் அன்பழகன் அளித்த உத்தரவாதத்தின் பேரில் சாலை மறியல் போராட்டத்தை சிஐடியு அமைப்பினா் திரும்பப் பெற்றனா்.