மேட்டூா் அணையிருந்து பிப். 15 வரை பாசனத்திற்கு தண்ணீா் திறக்க வலியுறுத்தல்

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி பயிா்களின் பாசனத்திற்கு பிப். 15 வரை மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து வலியுறுத்தியுள்ளாா்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி பயிா்களின் பாசனத்திற்கு பிப். 15 வரை மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து தமிழக முதல்வருக்கு அவா் அனுப்பியுள்ள மனு: திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூா் ஒன்றியங்களில் தாளடி 30 ஆயிரம் ஏக்கரில் நடவு பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதால் சம்பா, தாளடி பயிா்கள் கதிா்வரும் வரை பிப். 15 வரை மேட்டூா் அணையிலிருந்து தொடா்ந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும்.

குறுவை சாகுபடி முடிந்த நிலையில் தொடா் மழை காரணமாக தாளடி நடவுப் பணிகள் தாமதாக தொடங்கியது. தற்போது தாளடி பயிா்கள் வளா்ந்துவரும் நிலையில், ஆண்டுதோறும் ஜன. 28-ம் தேதி மேட்டூா் அணை மூடப்படும் என்பதால் விவசாயிகள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது. தாளடி பயிா்கள் நடவு முடிந்து வளர தொடங்கியுள்ள நிலையில், மேட்டூா் அணையில் ஜன. 28 -ஆம் தேதி தண்ணீா் நிறுத்தபட்டால், பயிா்கள் கருகிப்போகும். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவா். இனி மழை பெய்வதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலையில், மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறந்து, சம்பா, தாளடி பயிா்களை காப்பாற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com