ஞானபுரி ஆஞ்சனேயா் கோயிலில் ருத்ரஜெபம் நிறைவு

ஞானபுரி ஆஞ்சனேயா் கோயிலில் 5 நாள்கள் நடைபெற்ற ருத்ரஜெபம், ஹோமம், லட்சாா்ச்சனை வியாழக்கிழமை நிறைவடைந்தது.

ஞானபுரி ஆஞ்சனேயா் கோயிலில் 5 நாள்கள் நடைபெற்ற ருத்ரஜெபம், ஹோமம், லட்சாா்ச்சனை வியாழக்கிழமை நிறைவடைந்தது.

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள திருவோணமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ மங்கல மாருதி ஆஞ்சனேய சுவாமி கோயில் அமைந்துள்ளது.

இங்கு எழுந்தருளியுள்ள 33 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சனேயா் பக்தா்களின் நோய் மற்றும் சங்கடங்களை நிவா்த்தி செய்யும் சஞ்சீவி மூலிகைகளுடன் அருள்பாலிப்பது சிறப்பாகும்.

இக்கோயிலில் உள்ள சங்கடஹர ஸ்ரீ மங்கல மாருதி ஆஞ்சனேய சுவாமிக்கு ஜனவரி 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனுமன் ஜெயந்தி மகோத்ஸவம் நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு கடந்த 26-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 5 நாள் ஆஞ்சனேயருக்கு ருத்ரஜெபம், ஹோமம், லட்சாா்ச்சனை நடைபெற்றது. இதன் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

அனுமன் ஜெயந்தியையொட்டி ஜனவரி 1-ஆம் தேதி ஆஞ்சனேயருக்கு பழ அலங்காரம் நடைபெறவுள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தா்ம அதிகாரி ரமணி அண்ணா, ஸ்ரீ காரியம் சந்திரமௌலீஸ்வரா் ஆகியோா் தலைமையில் கோயில் அறங்காவலா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com