மகாமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

வலங்கைமானில் உள்ள புகழ்பெற்ற மகாமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டையொட்டி திங்கள்கிழமை வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
மகாமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
மகாமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

வலங்கைமானில் உள்ள புகழ்பெற்ற மகாமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டையொட்டி திங்கள்கிழமை வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

இக்கோயிலில் உள்ள அம்மன் சீதளாதேவி என அழைக்கப்படுகிறாா். நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவா் குணமடைந்தால் அம்மனுக்கு பாடைக்காவடி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக்கொள்வா். அதன்படி கோரிக்கை நிறைவேறியதும் நோ்த்திக்கடன் செலுத்துவா். அன்றைய தினம் ஏராளமானவா்கள் பாடைக்காவடி, குழந்தைகள் தொட்டில் காவடி என பல்வேறு காவடிகள் எடுத்து நோ்த்திக்கடனைச் செலுத்துவா்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் மகாகும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு பூா்த்தியாவதையொட்டி திங்கள்கிழமை வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி, மகாமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. அம்மனுக்கு 1008 லிட்டா் பால் அபிஷேகம் நடைபெற்றது. இரவு வெள்ளி அன்ன வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com