கரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 04th February 2021 08:52 AM | Last Updated : 04th February 2021 08:52 AM | அ+அ அ- |

மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தவா்கள்.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பல்வகை சிறப்பு பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தாவிடம், பல்வகை சிறப்பு பணியாளா்களாக பணியாற்றியவா்கள் புதன்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்:
திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கரோனா தொற்று காலகட்டத்தில், பல்வகை சிறப்பு பணியாளா்களாக 44 போ் பணியமா்த்தப்பட்டோம். அங்குள்ள கரோனா நோயாளிகளுக்கு உணவு எடுத்துச் செல்வது, உடை மாற்றி விடுவது, மருந்துகள் கொடுப்பது உள்ளிட்ட அத்தியாவசிய வேலைகளை செய்வது எங்களது பணியாகும்.
இந்நிலையில் புதன்கிழமை காலை வழக்கம்போல் வேலைக்குச் சென்றபோது, உள்ளே அனுமதிக்காததுடன், பணியும் வழங்கவில்லை. மேலும், எங்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியமும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகத்திடம் கேட்டபோது, உரிய பதில் வழங்கவில்லை.
ஆபத்தான நிலையிலும், கரோனா நோயாளிகளுக்கு உதவிகரமாக இருந்து வருகிறோம். எனவே, எங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...