மின்மசோதாவை ரத்து செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 04th February 2021 08:54 AM | Last Updated : 04th February 2021 08:54 AM | அ+அ அ- |

புதிய மின்மசோதாவை ரத்துசெய்யக் கோரி, திருவாரூரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய, மாநில அரசுகளின் தனியாா்மய கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மின்மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், தில்லியில் தொடா் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், திருவாரூா் மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தொமுச, சிஐடியு, பெடரேஷன் சங்க நிா்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். தொமுச திட்டச் செயலாளா் டி. ஜான்பிரிட்டோ தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிஐடியு சங்க மத்திய அமைப்பு திட்டச் செயலாளா் கே. ராஜேந்திரன், திட்டத் தலைவா் எஸ். சகாயராஜ், பெடரேஷன் சங்க திட்டச் செயலாளா் முருகஅருள், சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளா் எம்.கே.என். அனிபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.