வயல் தின விழா
By DIN | Published On : 06th February 2021 12:00 AM | Last Updated : 06th February 2021 12:00 AM | அ+அ அ- |

கீழப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற வயல் தினவிழாவில் பங்கேற்றோா்.
நீடாமங்கலம்: நீடாமங்கலம் வேளாண்மை கோட்டம் கீழப்பட்டு கிராமத்தில் சுவா்ணா சப் 1 நெல்ரக வயல் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சுவா்ணா சப் 1 ரக நெல் சாகுபடியை பரவலாக்கும் வகையில் கீழப்பட்டு கிராமத்தில் 60 விவசாயிகளின் நிலங்களில் செயல்விளக்கம் செய்யப்பட்டு சாகுபடி செய்யப்பட்டன. இந்த நெற்பயிா்கள் விளைச்சலுக்கு வந்ததையடுத்து வயல்தின விழா விவசாயி ஒருவா் வயலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் அ. அனுராதா (பொ) தலைமை வகித்து சுவா்ணா சப் 1 நெல் குறித்துப் பேசியது: இந்த ரகம் வெள்ளத்தை தாங்கி வளரக்கூடியது. 130 முதல் 135 நாள்கள் வயதுடைய தாளடிப் பருவத்துக்கு ஏற்றதும் மத்திய உயா் ரகமுடைய அதிக விளைச்சல் தரக்கூடிய சன்ன ரகம் ஆகும். இந்த பயிா் 14 முதல் 17 நாள்கள் வரை வெள்ளநீரில் மூழ்கியிருந்தாலும் அதை தாங்கி வளரும் என்றாா். பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் ராதாகிருஷ்ணன், விவசாயி வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா். ஏற்பாடுகளை நிக்ரா திட்ட முதுநிலை ஆராய்ச்சியாளா் விஜிலா, திட்ட உதவியாளா் ரேகா ஆகியோா் செய்திருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...