வேலங்குடியில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனையைத் திறந்திடக் கோரி சிபிஎம் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 06th February 2021 12:00 AM | Last Updated : 06th February 2021 12:00 AM | அ+அ அ- |

img_20210205_184641_0502chn_96
நன்னிலம்: வேலங்குடியில் கட்டி முடிக்கப்பட்டுப் பூட்டிக்கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தினைத் திறந்திட வேண்டுமென வலியுறுத்தி சிபிஎம் சாா்பாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூா் மாவட்டம் நன்னிலம் வட்டம் வேலங்குடிப் பேருந்து நிலையம் அருகே சிபிஎம் கிளைச் செயலாளா் ஆா் .ராமையன் தலைமையில், வேலங்குடி மற்றும் திருக்கொட்டாரம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளைகள் சாா்பாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்டுமானப் பணிகள் முழுவதும் முடிந்து, பல மாதங்களாகப் பூட்டிக்கிடக்கும் வேலங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மககள் பயன்பாட்டிற்க்காகத் திறந்திடவேண்டும்.
மிக மோசமாகச் சேதமடைந்து இடிந்து விழக் கூடிய நிலையில் உள்ள வேலங்குடி கிராம நிா்வாக அலுவலகத்திற்குப் புதிய கட்டிடத்தைக் கட்டித்தர வேண்டும். கமுகக்குடி மயானத்திற்குச் செல்வதற்குப் பாதை அமைத்துத் தர வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நன்னிலம் ஒன்றியச் செயலாளா் டி.வீரபாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினா் தியாகு ரஜினிகாந்த், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெ.முகமது உதுமான், ஒன்றியக்குழு உறுப்பினா் டி.பி. ராஜா உள்ளிட்டோா் பேசினாா்கள். பின்னா் நிா்வாகிகளும், கட்சியினரும் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு ஆா்ப்பாட்டம் செய்தனா்.