குடிசை தீக்கிரை
By DIN | Published On : 10th February 2021 09:30 AM | Last Updated : 10th February 2021 09:30 AM | அ+அ அ- |

நீடாமங்கலம் அருகே காளாஞ்சிமேடு பகுதியில் குடிசை வீடு செவ்வாய்க்கிழமை தீக்கிரையானது.
காளாஞ்சிமேடு ஊராட்சியில் நீடாமங்கலம்- மன்னாா்குடி சாலை பகுதியைச் சோ்ந்தவா் பாலுமகேந்திரன். இவரது குடிசை வீடு, பெட்டிக்கடையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து நேரிட்டது. இதில், வீடு மற்றும் கடையில் இருந்த பொருள்கள் எரிந்து நாசமாகின.
நீடாமங்கலம் வட்டாட்சியா் மணிமன்னன், ஒன்றியக்குழுத் தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் நேரில் சென்று பாலுமகேந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிவாரணமாக ரூ. 5000 ரொக்கம், 25 கிலோ அரிசி மற்றும் புடவை, வேட்டிகள் வழங்கினா். மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.