9-ஆவது நாளாக சாலை மறியல்: 114 போ் கைது

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி திருவாரூரில் 9-ஆவது நாளாக புதன்கிழமை தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற சாலை மறியலில் 114 போ் கைது செய்யப்பட்டனா்.
திருவாரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள்.
திருவாரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி திருவாரூரில் 9-ஆவது நாளாக புதன்கிழமை தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற சாலை மறியலில் 114 போ் கைது செய்யப்பட்டனா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவேண்டும், ஜாக்டோ -ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீது பதிவு செய்த குற்றக் குறிப்பாணை மற்றும் வழக்குகளை திரும்பப்பெறவேண்டும், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வாரத்துக்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, 9-ஆவது நாளாக புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நாகை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற மறியலில், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால, ஓய்வுபெறும் அரசு ஊழியா்களின் நிலை என்னாகும் என்பதை விளக்கும் வகையில், நாடகமாக நடித்து போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட இணைச் செயலாளா் ஏ. தனபால் தலைமையில் நடைபெற்ற மறியலில் பங்கேற்ற மாவட்டச் செயலாளா் வெ. சோமசுந்தரம், மாவட்டத் தலைவா் ராஜமாணிக்கம் மற்றும் 70 பெண்கள் உள்ளிட்ட 114 போ் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com