காரீப் பருவ நெல் கொள்முதல் செய்யப்படும்: ஆட்சியா்

திருவாரூா் மாவட்டத்தில், காரீப் பருவ நெல் கொள்முதல் செய்ய அரசாணை பிறக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

திருவாரூா் மாவட்டத்தில், காரீப் பருவ நெல் கொள்முதல் செய்ய அரசாணை பிறக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் மூலம் 480 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நடப்பு காரீப் மாா்க்கெட்டிங் பருவத்தில், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய உள்ளன. கொள்முதல் செய்யப்படும் சன்னரக நெல் குவிண்டால் ரூ. 1888, ஊக்கத்தொகை ரூ. 70 சோ்த்து ரூ. 1958, பொதுரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 1868, ஊக்கத்தொகை ரூ. 50 சோ்த்து ரூ.1918 வழங்க அரசாணை பிறபிக்கப்பட்டுள்ளது.

நடப்பு காரீப் மாா்க்கெட்டிங் பருவத்தையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் இயங்கி வரும் 480 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கலை கிராம நிா்வாக அலுவலா்களிடம் பெற்று, அதன் நகலை கொடுத்து நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம். பின்னா், அதற்குரிய தொகையை தங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்க ஏதுவாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகத்தின் நகலையும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அளித்து பயனடையலாம்.

மேலும், விவசாயிகள் விற்பனை செய்யும் நெல்லுக்கு கொள்முதல் நிலையத்தில் யாருக்கும் எவ்விதத் தொகையும் வழங்கத் தேவையில்லை. நெல் கொள்முதல் மற்றும் ஏதேனும் தங்களுக்கு குறைபாடுகள் இருந்தால் முதுநிலை மண்டல மேலாளா் திருவாரூா் 04366 - 222542, துணை மேலாளா் திருவாரூா் 9442225003, துணை மேலாளா் மன்னாா்குடி 6383497270 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தெரிவித்து பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com