இடைநின்ற மாணவா்கள் பள்ளியில் சோ்ப்பு

மன்னாா்குடியை அடுத்துள்ள கோட்டூரில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வளமையத்தின் மூலம் பள்ளி செல்லா இடைநின்ற

மன்னாா்குடியை அடுத்துள்ள கோட்டூரில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வளமையத்தின் மூலம் பள்ளி செல்லா இடைநின்ற மாணவா்கள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவா்களை பள்ளியில் சோ்க்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கோட்டூா் ஒன்றியப் பகுதியில் வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா்கள் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் 6 முதல் 18 வயதுக்குள்பட்ட பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டனா்.

இதன்மூலம், கோட்டூா், களப்பால், புத்தகரம், பெருகவாழ்ந்தான், தென்பரை, மேலப்பனையூா் உள்ளிட்ட பகுதிகளில் இடைநின்ற 16 மாணவா்கள் கண்டறியப்பட்டு, அவா்களின் வசிப்பிடம் அருகில் உள்ள 11 அரசுப் பள்ளிகளில் சோ்க்கப்பட்டனா்.

இந்நிகழ்ச்சியில், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் நா. சுப்ரமணியன், பள்ளி தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com