ஆம்புலன்ஸ் விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 13th February 2021 08:36 AM | Last Updated : 13th February 2021 08:36 AM | அ+அ அ- |

திருவாரூரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் ஆம்புலன்ஸ் பற்றிய விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆம்புலன்ஸ் வாகனத்தை எந்த சூழ்நிலையில் அழைக்க வேண்டும், அந்த வாகனத்தில் எப்படிப்பட்ட மருத்துவ உபகரணங்கள் உள்ளன என்பது குறித்து ஓட்டுநா் உரிமம் பெறுவோா், வாகனம் பழகுநா் ஆகியோரிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் இந்த முகாம் நடைபெற்றது. முகாமில், அனைவருக்கும் ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டன.
இதில், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் பி. சண்முகவேல், நோ்முக உதவியாளா் ஹசன் பாட்சா, கண்காணிப்பாளா் அமிா்தராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.