சாய்பாபா கோயிலில் ஸ்ரீசத்யநாராயண பூஜை
By DIN | Published On : 13th February 2021 08:31 AM | Last Updated : 13th February 2021 08:31 AM | அ+அ அ- |

சிறப்பு அலங்காரத்தில் பூந்தோட்டம் ஸ்ரீசீரடிசாய்பாபா.
பூந்தோட்டம் ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் தை அமாவாசையையொட்டி சிறப்பு ஸ்ரீசத்யநாராயண பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
பூந்தோட்டத்தில் சிவசித்தா் ஸ்ரீசீரடிசாய்பாபா கோயில் உள்ளது. இக்கோயிலில் தை அமாவாசையையொட்டி, ஸ்ரீசீரடிசாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேக- ஆராதனையும், ஆரத்தியும் நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு ஸ்ரீசத்யநாராயண பூஜை நடைபெற்றது.
மேலும், தை கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி கோ பூஜையும், குபேர பூஜையும், சிறப்பு சகஸ்ரநாம அா்ச்சனையும் நடைபெற்றது. இதற்கானஏற்பாடுகளை கோயில் நிறுவனா் சாய்சுதாகா் தலைமையில், சரவணன் உள்ளிட்ட பக்தா்கள் செய்திருந்தனா்.