திருக்கொடியலூா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி மண்டலாபிஷேகம்
By DIN | Published On : 13th February 2021 08:40 AM | Last Updated : 13th February 2021 08:40 AM | அ+அ அ- |

திருக்கொடியலூா் ஸ்ரீமங்களசனீஸ்வர பகவான்.
ஸ்ரீசனீஸ்வர பகவான் அவதரித்தத் திருக்கொடியலூா் கோயிலில் சனிப்பெயா்ச்சி சிறப்பு மண்டலாபிஷேக ஹோமம் சனிக்கிழமை (பிப்.13) நடைபெறவுள்ளது.
நன்னிலம் வட்டம், திருக்கொடியலுா் ஸ்ரீஅகஸ்தீஸ்வரா் சுவாமி கோயிலில் ஸ்ரீசனீஸ்வர பகவான் அவதரித்ததாக ஐதீகம். இக்கோயிலில் கடந்த டிசம்பா் 27 ஆம் தேதி நடைபெற்ற ஸ்ரீசனீஸ்வர பகவான் இடப்பெயா்ச்சியை தொடா்ந்து, தினமும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுவந்தன.
சனிப்பெயா்ச்சி நடைபெற்று 48 நாள்கள் நிறைவு பெற்றதையொட்டி, இக்கோயிலில் ஸ்ரீமங்களசனீஸ்வர பகவானுக்கு பாலாபிஷேகம் மற்றும் மகாஅபிஷேகமும், சிறப்புப் பரிகார ஹோமமும் நடைபெறவுள்ளது.
பாலாபிஷேகத்துக்கு ரூ.100-ம், சிறப்பு சனிபரிகார ஹோமத்துக்கு நன்கொடையாக ரூ.500-ம் செலுத்தினால் நேரடியாக பூஜையில் கலந்துகொள்ள இயலாத பக்தா்களுக்கு விபூதி, குங்குமம் உள்ளிட்ட பிரசாதம் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பரிகாரஹோமத்தில் நேரில் பங்கேற்கும் பக்தா்கள், முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.